பெண்ணெனப் படுகிற
பெரும் மேதை அவள்...
அசையும் சித்திரம் அவள்...
ஆழத் தத்துவம் அவள்....
எத்தனை அடித்தாலும்
மௌனமாய் பொறுக்கும்
பூமியுமவள்.... கொஞ்சமாய் நீ நேசித்தாலும்
நெஞ்சம் முழுதும் உன்னை நிரப்பிக் கொள்பவள்....
வஞ்சமே செய்தாலும்
வாஞ்சையோடு உன்னை மன்னித்து சிரிப்பவள்....
அன்னையும் அவள்...
அந்த சொல்லின் உண்மையும் அவள்.....
நதிகளும்
அவள் பெயரை சூடிக் கொண்டு...
பெண்மைக்கு பெயர்ந்தது
அவள்
உரிமை நாடி
கடமை செய்பவள்....
மடமை துறந்த ஞானி அவள்...
கண்ணிமைக்கும் நொடியில்
என்னவும் செய்வாள்
கலையனைத்தும் கற்ற
கன்னியவள்....
கண்ணசைவுக்கு பணியும்
காட்டாறு!
அவளுடனான எந்த உறவும்
அன்பை அடித்தளமாக்கி
அமையுமென்பதால்.....
நீரின்றி அமைந்தாலும்
அவளின்றி அமையாது
உலகு....
குறும்பும் கோபமும் அவளின் இருபுறம்..
வானம் தொட்டு
பறக்கவும் முடியும்...
அது தான் நிதர்சனம்...
தீண்டும் வரை
தென்றல்....
தீண்டிய பின் தெரியும்
தீயின் பிளம்பவள்.....
சுற்றுகிற உலகின்
சுழற்சி விசை...
உலகின் அத்தனையும் அவள்
பெண்ணெனப் படுபவள்.....
கொஞ்சமாய் நீ நேசித்தாலும்
ReplyDeleteநெஞ்சம் முழுதும் உன்னை நிரப்பிக் கொள்பவள்....
வஞ்சமே செய்தாலும்
வாஞ்சையோடு உன்னை மன்னித்து சிரிப்பவள்....
very nice.........
Inniya magaleer thina nal valthukkal...
ReplyDeletePenindri amayaathu ivulagu....
Arumayaana varigal oru penidam irunthu....
sathya sonna maadri anda lines superb!!!!!!!!! full kavidhaiyum nallaruku....
ReplyDelete//பெண்ணவள் என்று சிறப்பனவள் தான் :)//
ReplyDeleteஅருமையான வரிகள் கவி பாரதி :)
வாழ்த்துக்கள்
MAKES WOMAN KIND PROUD
ReplyDeleteproud of u...........athithya.
ReplyDelete