Nov 13, 2012

குழந்தையினம்

மழலை இனமே
வர்ண கனாக்களின்
எதிர் காலம் நீ..

உன் மென்மை
வன்மை கொண்டது...

பூக்களெல்லாம்
உன்  பார்வை வேண்டியே
தவமிருக்கும்...

மழையென்பது
உன் புன்னகையின் மறுமொழி..

உன் இதழோரம் இருக்கிறது
உண்மையான அமுது..

மனதில் ஒன்றும்
முகத்தில் ஒன்றும்
நீ வைக்க மாட்டாய்...

உனக்குள் இருக்கிறது
பல சூரியப்  பிரளயம்...

உன் அர்த்தமற்ற மொழியில்
அடங்கிக் கிடக்கின்றன
அகராதிகள்...

பிளாட்டினம் உயர்ந்ததாய்
சொல்கிறார்கள்...

இல்லை...

நீ தான்
உயர்ந்தில் உயர்ந்தது...

ஓய்ந்து கிடக்காதே
ஓரம் கட்டும் கூட்டம்
உன் உத்வேகத்தில் ஒழிந்து போகும்...

காலம் மாறிய பின்னும்
மாறாத பாடத் திட்டம்...

உன்னை மட்டம் தட்டும்..

எத்தனையோ புதுக்கவிதை இருந்தும்
புறநானூற்றை கட்டியழும்
உன் தமிழ் புத்தகம்....

தினம் மாற்றங்கள் காண்பது
உலகின் நியதி...
நல்லதொரு மாற்றத்தை செய்ய
ஊக்கம் தாராது...

அக்பரை பேசும் உன் வரலாற்றுப் புத்தகம்...

மயக்கம் வேண்டாம்
சரிவுகள் இல்லா வாழ்வியல் உனது...

போர்க்கலங்கள் என்பது
உன் வருங்காலத்தில் இல்லை...

அப்படி வரினும்
பூக்கலங்கள் நட்டு
ஒற்றுமை விதை...

உன் பார்வையில் தெறிக்கும்
தீ பொறியால்...
தீவிரவாதம் ஒடுக்கு...

நீ விளையாடும் ஆட்டத்திலும்
சொர்வென்பது  கூடாது

தொல்வி என்பது
உனக்கு எழுத படாத விதி...

உன் ஒற்றை சிறு விரலால்
தொடும் போது
ஆறாத காயமெல்லாம்...
ஆறிடும்...

சேராத உறவுகள் எல்லாம்
சேர்ந்திடும்..

உன் உற்சாகம் உலராது பார்த்துக்கொள்...
உன் பெயரை சரித்திரம் பதிவு செய்யட்டும்...

நீ இடும் முத்தங்களில் கூட..
அறிவின் வாசனையடிக்கட்டும்!!!

முதுமை கற்பிக்கும்
வேறுபாடுகள்
வித்யாசங்கள்
உனக்கு புரியாது

சுகமாய் இரு..

இடைஇடையே
மனிதர்களை இனம் கண்டு கொள்

உன் அறிவாற்றல்
இந்த பூமிக்கு இன்னும் சில "கலாம்" களை தரட்டும்...

கண்ணீரால் பூத்தொடுக்க முடியாது
தொடைத்து எழு...

உன்னை வளர்த்தெடுக்க
நாங்கள் காத்திருக்கிறோம்...

காலம் உன்  செயல்களுக்கு
கை விரித்து கிடக்கிறது..

நீ நடக்கும் பாதையில்
சில முட்கள் இருக்கவே இருக்கும்

உன் பாதங்களில்
உதிரம் வரவழைக்கும் எண்ணம் கொண்டவர்களிடம்
ரோஜா பூக்களை திணித்து
நிமிர்ந்து நடை போடு...

இன்று முளைத்த கன்று நீ
வருக நீ வண்ணம் பல கொண்டு....

உலகம் இனி உனது....!!!



   






கண்ணீர் ஆறுதல்

அந்தி சிவந்த
அந்தவொரு பொழுதில்
வந்து போனாய் என் வாசலோடு ..

என்ன குறை கண்டுவிட்டாய் என்று
புறப்பட்டாய் நேரத்தோடு..??

என் வீடு வரும் வழியில்
பூக்கள் இல்லை என்பதாலா?

உற்று பார் நீ
உனக்காக என் உதிரத்தை உரமாக்கி
உயிர் பூக்களை
வளர்த்திருக்கிறேன்...

ஒரு பயனுமின்றி இறந்திருப்பேன்

நல்ல வேலை
நீ வந்து அர்த்தமூட்டினாய்...

கவிதையில் கண்ணுறக்கம் தொலைத்திருந்தேன்
நீயல்லவா கனவுகளின் தேவை சொல்லி
உறங்க கற்றுத் தந்தாய்..

நெல்லமுதே..

நீ அழுதாயே
அன்று என் ஆயுள் ரேகை
தேய்ந்தது..

உன்னைப் போல் வேறெதுவும்
கள் வெறி தராது..
தராது...

என்னை கவியாக்கிய கற்பனையே
உன் பெயரை யாரேனும் அழுத்திச் சொல்லிவிட்டால்

அழுது விடுவேன்..

உன் நிழலை கூட
யாரும் நெருங்க நேர்ந்தால்
பல்லாங்குழி பரல்கள் போல்
என்னுள்  அரும்பும் ரத்தம்..

என் இலையுதிர் காலங்களை
முடித்து வை

ஒற்றை புன்னகையில்
காய்ந்த உணர்வுகளுக்கு
மருந்து போடு..

நீ சிரிக்க
என் அழுகைகள் காரணமாகுமேன்றால்..

விழிகள் இறக்க அழுதிட சம்மதம்...

உன் நினைவுகள் சுமந்து
நான் மரிக்கும் போது

கல்லறைகளும் எனக்காக கண்ணீர் வடிக்கும்...



Nov 12, 2012

என் கவிதைக்கான காரணங்கள்...

அதிகாலை இருட்டு
குளிர்கால மழை

வானப் போர்வை விலக்கும் சூரியன்
பனி குவிந்த மலர்கள்

பாதி சிவந்த மேகம்
கண்களில் திரளும் கண்ணீர்

காதலின் முகம்
தரப்படாத முத்தம்

குளத்தங்கரை பறவைகள்
நிலா வழிகிற பொழுது

நட்சத்திரங்கள் படர்ந்த பிரபஞ்சம்
மணல் தரித்த பாலை

உலகத்தின் அசாதாரண அசைவு
ரயில் பயணத்தின் தனிமை

கோபத்தின் விளிம்பில் வெடிக்கும் மௌனம்
நெஞ்சை பிழியும் சோகம்

மனதை குலுக்கும் நட்பு
அறிவை துலக்கும் புத்தகம்

உள்ளம் உடைய அழும் போது
அன்பு வடிக்கிற நட்பு

கடக்கும் குழந்தையின் அழுகை
பாதியில் நின்றுவிட்ட  கவிதை..

பருவமெய்த பெண்
நிலத்தை வானோடு கட்டிடும் மழை

முதுமையின் விவேகம்
கள்ளமற்ற எழுத்து

கருணை மறந்த கடவுள்
தூக்கமில்லா இரவு

துடிதடங்கும் மீன்கள்
சொன்னாலும் தீராத வறுமை

இந்த பூமி கொண்டுள்ள பொறுமை
மொட்டு விரியும் அழகு

இதயத்தை இதமாகும் கடலோர காற்று
தேசியம் பேசிய புனிதர்கள்

தினம் கெட்டு வரும் அரசியல்..

இன்னும் இன்னும் நிறைய இருக்கின்றன
என் கவிதைக்கான காரணங்கள்...