இத்தனை நாட்களுக்குப் பிறகும்....
உன் வாசனை திரவியம்
என் நாசி தொட..
அது நீ தானோ என்று
திரும்பிப் பார்கிறேன்...
பத்து வயதில் வந்த காதல்
இன்னும் என் இதயத்தில்
இறுகிக் கிடப்பது
கசப்பான உண்மையடி!
பள்ளி வயதில்
என் மனதில் வளம் வந்த
ரெட்டை ஜடை ரோஜாப் பூவே...
நீ நலமா..?
உன் திமிர் நிறைந்த முகமும்..
தென்றல் பேச்சும்..
வருடங்கள் கழித்து வந்திறங்கிய மழை போல்
குளிரூட்டிய சிரிப்பும்...
இன்னும் ஞாபகமிருக்கிறது... !
உனக்கு என்னை ஞாபகமிருக்கிறதா....???
உன்னைப் பார்க்கவே பள்ளிக்கூடம்
வந்த நாட்களை
நான் எப்படி மறப்பது???
என் நோட்டுப் புத்தகத்தில்
மயிலிறகு வைத்திருதேன்..
அது குட்டி போட்டதோ இல்லையோ...
ஒருநாள்
அதை உன் புத்தகத்தில் வைத்துக் கொள்ள
ஆசைப்பட்டாய்...
அன்று
உன் மீது எனக்கு காதல் பூத்தது...
உன்னை அறியாமல்
என் தோளில் கை போட்டு
நடந்தாய்..
என் மனசு
பறக்கத் துடிக்கிற பட்டமாய்
தளும்பியது!
உனக்கு கொடுப்பதற்காகவே
தினமும் மல்லிகைப் பூக்களை
பையில் கட்டி வருவேன்...
வாங்கிக் கொண்டு புன்னகைப்பாய்...
அன்று நீ செய்த புன்னகைக்கு என்ன அர்த்தம்???
என்னை ஆசிரியை
அடித்த போது
உன் விழியோரம் வெண்ணீர் பூத்திருந்ததே...
என்னைப் உனக்குப் பிடித்திருந்ததா?
தெரியும்..
பத்து வயதில் வருவதெல்லாம்
காதலாகாது..
இருந்தாலும்...
உயிரழித்து மோசம் செய்யும்
புயல்
விட்டுச்செல்கிற தாக்கத்தை
தரும்...
ம்ம்ம்...
தந்தது!!!
நானும் நீயும்
பார்த்துக் கொண்டோம்...
அடிக்கடி சிரித்துக் கொண்டோம்...
அத்தனை பேர் இருந்த போதும்
என் நினைவுக்கூட்டில் ஒட்டி இருப்பது
உன் முகம் மட்டும் தான்...
பதிமூன்று வருடங்கள்
கடந்தாலும்
என் மனதுக்குள் முதல் முறை
காதல் விதைத்த உன்னை
எண்ணாமல் இருப்பது என்ன நியாயம்???
உனக்கு மணமாகியிருக்கலாம்
பழகித் திறந்த பள்ளிக் காலத்தை
நீ மறந்துமிருக்கலாம்....
நான் கொண்ட முதல் காதலே..
உன்னை மறவாத நான்
இன்னும் உயிரோடு
இருப்பதற்கு
இது ஒரு பதிவு!!!
Niraiya per manathukkul pudhindhu kidakkum azhagaana ninaivugal... nandraaga irukkirathu neengal... rettai jadai roja poovai ninaithupaarkira vidham.... :)
ReplyDeleteஅத்தனை பேர் இருந்த போதும்
ReplyDeleteஎன் நினைவுக்கூட்டில் ஒட்டி இருப்பது
உன் முகம் மட்டும் தான்...
பதிமூன்று வருடங்கள்
கடந்தாலும்
என் மனதுக்குள் முதல் முறை
காதல் விதைத்த உன்னை
எண்ணாமல் இருப்பது என்ன நியாயம்???
nize lines ya
hats off
searchin for my mynaa!!!
SAN!!!
என் பள்ளித்தோழியை நினைவு படுத்தியது இந்த கவிதை!
ReplyDeleteபள்ளி பருவத்தில் துளிர்க்கிற முதல் காதல்... ம்ம்... மறக்க முடியாதது.. கவிதை அருமை
ReplyDelete