தேவதைகள் வெறுக்கப் படுவதில்லை
நெஞ்சறுத்து நேச துரோகம் செய்த போதும்.....
நீ தேவதைகளில் ஒருத்தியோ...
நினைவு கிண்ணத்தில் நிறைந்து
என் மூச்சு காற்றை விழுங்கி
ஒன்றுமறியா குழந்தை போல
ஓரப் பார்வை வீசுகிறாய்...
கனாக்களில் காதல் சொல்வாய்
எங்கே..
என் கண்களில் உற்று நோக்கி
சொல்... என்னை பிடித்ததாய்...
நெற்றியும் இன்றயும் பாரமாக்கிய
என் பாசத்திற்குரிய காதல் துரோகியே..
காதல் இருந்தால்..
தேநீர் கொப்பைகுள்ளே
விழுந்த சர்க்கரை துகள்கள் போல்
நாம் சேர்ந்தே கரைந்திடலாம்
கம்பளி வியர்வைக்குள்
காதல் நித்திரையாய்
நாம் கலந்தே உறங்கிடலாம்
ஆக்ஸிஜன் அற்று விட்ட
ஒரு அண்டத்தில்
இருப்பது போல் உணர்கிறேன்...
என் பேரழகே நீ வந்தால்
உன்னை என் சுவாசப் பை முழுக்க
நிரப்பிக் கொள்வேன்...
நீ அழகில்லை என்பேன்
கோவத்தில் உன் முகம் சிவக்க
நீ என்னை முரைத்திடும் போது
என் காதல் கற்கண்டே என்று
கூவி அழைப்பேன்...
திமிரின் பின்பமாய்
என்னை திணரடித்தாய்
நான் வெறுக்க முடியாத பவுர்ணமியாய்
என் வானுடைத்தாய்..
நீ நூலகமாவதானால் சொல்
உன்னில் இருக்கும்
உயிர் மெய் ஆயுதம் அனைத்தையும்
படித்து இறப்பேன்...
என் நேற்றைய நாட்கள்
வீணாய் போக
காத்திருப்புகளை தண்டனைகளாய் வழங்கினாய்
உனக்கு பிடித்த பூக்கள் எல்லாம்
என் வீட்டை அலங்கரித்தப் பின்னும்
என் வீடு அழகாகவில்லை...
என் கவிதையே ..
நிலவரும்பாய் சிரித்து
நெய் அமுதாய் பேசி
நாளும் என் விரல் கோர்த்து நீ வராது..
எந்த பூவும்
உண்மையில் பூக்க போவதில்லை
இந்த உலகில்...
தேவதைகள் வெறுக்கப் படுவதில்லை
ReplyDeleteநெஞ்சறுத்து நேச துரோகம் செய்த போதும்..... :)
Supper