Oct 31, 2010

நீயே சொல்

என் வேரின் முதல் பொழிவே
எனதிரு விழியின்
முதல் கனவே..
எனக்கான கண்ணீரில் கசிகிற இனிப்பே..

என் காதலை படிக்கும்
கல் கூட கலங்கும்

உனக்கு மட்டும் ஏனோ
கல்லே மனமாய் வாய்த்தது!

எவரெஸ்ட் உச்சியிலிருந்து
குதிக்கச்சொல்லி இருந்தாலும்
அது சாத்தியப்பட்டிருக்கும்...

உன்னை நேசிப்பதாய்
சொல்லி முடிப்பதற்குள்
முற்று பெற்றது என் உயிர்..

காதலை நீருபிக்கச் சொன்னாய்
என் மௌனப்பெருங்கடலே...
எப்படி நிரூபிக்க வேண்டும்..

சர்க்கரை வானம் பொழியும்
தறி கொண்டு எழுதிய
கடிதம் வேண்டுமா...

நித்திரை பல தொலைத்து
நான் கோர்த்த சித்திரை கனவுகள் தான் வேண்டுமா..

இத்தனை வருடமும்
நான் செய்த தனிமை தவம் கலைதத் தூரிகையே...

கன்னத்தில் குதித்து ஓட
நதிகளேதும் வேண்டுமா...

உன் பால் தேமலில் பதுங்கி நிற்க
சில நிலாத்துண்டு வேண்டுமா..

 கண்ணீர் கொண்டு நான் படைத்த
கவி ஏதும் வேண்டுமா...

என் ரத்தக்கறை படிந்த வாளேதும் வேண்டுமா..

உனது உள்ளங்கையோடு விண்மீன்கள் வேண்டுமா...

அரும்பில் கூட அழகாய் சிரிக்கும்
மல்லிகை தோட்டம் வேண்டுமா..

வீணையை மீட்டவும் கத்தி எடுத்த
என் முரட்டு மனதை

உன் பூவிரலால் தொட்டு கலைந்தாய்...

என் மலர்க்காடே
சொல் நீ...

தீயேதும் தின்று நான் செரிக்க வேண்டுமா...
பல மேகமுடைத்து பந்தல் ஏதும் பூட்ட வேண்டுமா...

என்னை முழுதாய்
விழுங்கி விட்டு...

ஒன்றுமே செய்யாதது போல்
பார்க்கிறாய்...

என்ன தான் செய்தால்
என்னை ஒப்புக்கொள்வாய் நீ....????

மனசிலிருந்து

உனக்கு பிடித்தாலும்
பிடிக்கவில்லை என்றாலும்

என் விரல்கள் விட்டு வழிகிற
இந்த வார்த்தைகளை
ஒரு முறையேனும் வாசித்து விடு

ஆனந்தம் கொள்ளும் என் காதல்..

அன்பே.. உன்னை என் மடியோடு கிடத்துகிற அந்த
பொழுதில்
மோகத்தையும் மிஞ்சுகிற என் தாய்மை
சொல்லும்
நமக்கான புரிதலை..

உன் இதழ்களை
குறிவைப்பதில்லை
என் இளமை...

உன்னை உச்சி முகர்ந்தல்லவா..
புன்னகை பூக்கிறது?

உனக்கு தெரியுமா..
உன்னை பார்க்கும் முன்பு வரை...

நான் யாரையும் நேசித்ததில்லை
நேசிக்கப்பட்டதும் இல்லை!

காய்ந்த மண் எப்படி
மழைத்துளியை
பார்த்து சிலிர்க்குமோ..

அப்படித்தான்
நானும்
உன்னை பார்த்து ஈரமானேன்...

நீ தான் எனக்கு
நடைப்பழக்கினாய்..

உன் விரல்களை இறுக பிடித்த போது தான்
எனக்கான பாதை
தெளிவுப்பட்டது!

எனக்கு தெரியாத கவிதை கூட
உன்னால் பரிச்சயமானது..

சில நேரம்
என் காதல் எல்லை தாண்டி போய்க்கொண்டே இருக்கும்...

உன்னிடம் ஒன்று மட்டும் கேட்பேன்...

என் நரம்புகள்
நாளங்கள்
உதிரம்
தசை

எல்லாம் எடுத்துக்கொள்

என்னை மட்டும் காதலிக்கும்
என் தேவதையாய்

எனக்கும் சேர்த்து
நீ வாழ வேண்டும்

எப்போதும் எனக்கான ஓருயிராய்...

Oct 27, 2010

மாயக்கவிதை

அத்து மீறல்கள் இல்லாத
அமைதியான தொடுதல்

ஆளை விழுங்கும் பார்வை..

ஆசையாய் பேசும் உன் கீச்சுக்குரல்..

நெற்றியை வளைத்த ஒற்றை முடி..

பேச்சின் இடையே என் காதோரம்
இதழ் பதிக்கும் குறும்பு

எப்போதும் கட்டிப்பிடித்து இம்சை செய் என்பது போல்
ஒரு தோரணை..

மாதம் ஒரு முறை
உன் உள்ளங்கையோடு இடம் பிடித்து விடுகிற
மருதாணி வாசம்..

மிட்டாய் வேண்டுமென்று  அடம் பிடித்து
பின்
பாதி தின்று மீதம் தருவாயே
அந்த பகிர்வு..

தூக்கம் தழுவும் நடுநிசியில்
உன் அருகில் உறங்க ஆசை என்று
குறுஞ்செய்தி கொடுத்து
உருக வைப்பாயே..
அந்த காதல்..

ஒரு முறை தொட்டு பார்க்க
முன்றதும்..
முடியாது என்று மறுப்புககொட்டுவாய்
அந்த கண்ணியம்..

தெருவில் என்னை உரசி நடப்பாய்..
உன் கரம் பிடித்தால்..
கூடாது என்று நடிப்பாய்..
மீறி பிடித்தால்..
முகம் சிவப்பாய்...
அந்த நாணம்..

யாரேனும் என்னோடு சிரித்துப் பேசிவிட்டால்...
அந்த நாள் முழுதும் நீ படும் அவஸ்த்தை

பேருந்தில் என்னை ஒட்டி உட்கார்ந்து..
மெதுவாய் "ஐ லவ் யு" என்பாய்...
அந்த கள்ளத்தனம்....

இத்தனை வயதிலும்
குச்சி ஐஸ் கேட்டு
நீ காட்டும் குழந்தைத்தனம்

பிடித்திருக்கிறது..

இன்னும் சொல்ல வேண்டுமா..

சொல்லச்சொல்ல தீராத
மாயக்கவிதை நீ..

உன்னை எழுதவே..
கவியாய் நான்...

குப்பைத்தொட்டி

 பத்து இருபது
வளையல் துண்டுகள்

நூற்றுக்கனகாய்ப்
பயணச்சீட்டு..

முப்பதுக்கும் மேலாய்
வாழ்த்தட்டைகள்..

எழுதிக்கிறுக்கிய
காகிதத் துண்டுகள்...

தின்று வீசிய
மிட்டாய் உரை

பரிசளித்த
செராமிக் பொம்மைகள்...

இன்னும்...

நீ...

தேவையில்லை என்று வீசிய
எல்லா பொருளும்...

இன்றளவும் இருக்கிறது
ரகசியமாய்...

என் தனி அறையையும்
மனசையும்
குப்பைத் தொட்டியாக்கியது

முதலும் கடைசியுமாய்...

நீ மட்டும் தான்...!!!

நீயின்றி அமையாது..

நிசப்தமான நள்ளிரவு
நீயில்லாத இப்பொழுது
உன்னைத் தொட்டுப் பார்க்கிறேன்
பேனா முனை கொண்டு..

பேசாத வார்த்தைகளை
இதழுக்குள் இறுக்கி வைத்தாய்..

அதனால்
பார்த்தாயா..

எத்தனை
எழுத்துச்சாரல்கள்...

 உன் காதலில் நனைந்து
என் காகிதங்கள் எல்லாம்..
தலைத்துவட்டியபடி!

நிலாவும் நீயும்
உறவுக்காரர்களோ என
நினைத்து
வானம் பார்த்தால்

விண்மீன்கள் ஆமோதித்தன
கண்கள் சிமிட்டி...

என் வீட்டு ரோஜாச்செடியின்
ஈரத்துளியும்..

உன் நெற்றி வியர்வையை
நினைவூட்டினால் என்ன ஆவேன் நான்...?   

இத்தனை லட்சம்
இடைவெளி இருந்தும்

உன்னையே எழுத் வைக்கிறாய்..
உன்னைப் போல் வேறில்லை என
புலம்ப வைக்கிறாய்...

நீரின்றி அமையாது தான் உலகு..

எனக்கு..

நீயின்றி அமையாதடி உலகு!

காகிதக்காதல்

இன்னொருவனை நீ மணந்தாய்
என்ற போதும்
இன்றளவும் உன்னை நினைத்து
உயிர் கொள்கிற உரிமையில்
எழுதுகிறேன் இக்கவிதை!!

உன் நினைவுகள் கொண்டு
நான் தாள் தொடுகையில்
கவிதை பூக்களாய் சிதறி விழும்!

எப்படிச்சொல்ல
என்னுயிராய் இருந்தவள் நீ

இன்று முகமறியா தொலைவில்
தொலைந்தே தான் போன கதை...

மாற்றான் தோட்டத்து  மல்லிகைக்கு
ஆசைப்படும்
பட்டுப்பூச்சியாய்
திரியவிட்டாய்...

நான் உன்னை பிரியக்கூடுமென்று
பேச்சுக்கு சொன்னால் கூட

தேம்பி அழுது
என் மார்பு நனைத்த நீயா

என்னை விட்டு வெகுதூரம் போனாய்
என்று எண்ணிவிட்டால்

வருகிற என் விழி நீரை துடைக்க
விரல் இல்லை அன்பே..

"இவளுடனே இந்த கணம்
இறப்பதுவும் மேல்" என்று
இச்சை கொண்டேன்..

இப்பொழுது
நீ ஆசைப்பட்டதெல்லாம் செய்து
பைத்தியம் போல் உளறுகிறேன்..

சொல்லி வைத்த காதல் எல்லாம்
என் வீட்டு முற்றத்தில்
கவிதையென தூக்கம் கொள்ள

"நீ இல்லாத ஒரு வாழ்க்கை
வாழவே மாட்டேன்" என்று
விம்மியழுத நீயோ

ஒற்றைக் குழந்தையுடன்
ஒரு கிழக்கில்
சிக்கிவிட்டாய்

காகிதத்தில் உறங்கினாலும்
என் காதலுக்கு
உயிர் இருக்கும்...

காலம் உள்ள வரைக்கும்!

Oct 24, 2010

காலடியில் சருகானேன்..


தேள் கொட்டிய வலி கொடுத்தாய்

நீ தேன் என்று எண்ணிவிட்டேன்..
தீந்தனலாய் எனை எரித்தாய்..

உன் பால் முகம் கண்டு
நான் வாழ
பல நாளாய் கனவு கொண்டேன்

பவுர்ணமி நீயோ
என் வானம் வெறுத்துவிட்டாய்!

பூவிழியாள்
உன் பார்வை
யாசித்த ஒரு வண்டு நான்..
ஏனோ என் உயிர் வாசம்
கொய்துவிட்டாய்!

நீ என்ன நினைத்துவிட்டாய்??
நிலம் போல பொறுமை கொண்டேன்..
தினம்
என் உணர்சிகளோடு ஆட்டம் போட்டாய்..

உன் விழிச்சிறையில்
எனை அடைத்து
கண்ணாம்பூச்சி காட்டுகிறாய்..

கவிதை பல பேச வைத்து
கற்பனையில் சாக வைத்தாய்

தளிரே
உன் அழகுக்கு அடிமையானேன்..
அதை கூட மறந்துவிட்டாய்..

நீ தான் என் உலகமென்று
உன் காலடியில் சருகானேன்....

நீயோ உன் கால்களாலும்
எனை மிதிக்க மறுத்துவிட்டாய்..

கொஞ்சமும் சோர்வின்றி
மீண்டும் மீண்டும்..

உன் பாதங்களை வருடுகிறேன்...
பாவை உன் மனதின்
எங்காவது ஒரு மூலையில்...

என் காதல் வேரூன்றும்  ஒருநாள்
அது வரை..

உன் காலடியில் சருகாகவே
காத்திருப்பேன்!

Oct 21, 2010

காதலால் கண்ட பலன்

       
உன்னையும் தொலைத்த
ஒரு உன்னத நிலை

அதற்கு இல்லையென சொல்
புவியினில் விலை..

மழைச்சாரல் போல்

பொழிந்து
மனசுக்குள்
விருட்சம் விதைக்கும்

அது தான்
உயிர்த்திருக்கக்  காரணம்
உனக்கும் எனக்கும்!!!

கனவுகள் எதுவானாலும்
கைத்தொட வைக்கும்

காதல் கால் வைக்காத இடம்
புறம்போக்கு நிலம்!

அவள் மௌனத்தைக் கேட்கவும்
காதுகள் முளைக்கும்..

பார்க்கிற பொருளில் எல்லாம்
பாவை முகம் வந்து
பாவி மனம் வருடும்!

பழகிய சாலை என்றாலும்
இப்போது பூக்கள் பூத்திருக்கும்

நடக்கும் போது
உன் கால்களுக்கடியில்
பூமி வசப்படும்!

அன்று வரை ஏறெடுத்தும்
நீ பார்க்காத குழந்தையை
நெஞ்சம்
வலுக்கட்டாயமாய் தொட்டு தூக்கச்சொல்லும்

அவளை கண்களுக்குள் இறுக்கிக்கொண்டு
குழந்தையை  உச்சி முகர்வாய்..

நீ தூரிகையைத் தொட்டாலே
ஓவியம் ஜனிக்கும்

எது வரைய நினைத்தாலும்
அவளின் வாசனை உன் கைகளை நனைக்கும்

ஒவ்வொரு முறையும்
காதல் நீ படும் அவஸ்தைகளைப் பார்த்து
கண் சிமிட்டும்!

யாரும் பார்க்காத போதும்
அழகாய்த் தெரிய
ஆசைப்படுவாய்!

அப்போது உன் அனுமதியின்றி
காதல் உன் கன்னத்தில்
ஊஞ்சல் போடும்!

வெள்ளை தாள்கள் கண்டால்
உன்னவள் பெயரை
கிறுக்குவாய்

உனது முரட்டுத்தனம்
அவளது ஒரு பார்வையில் முடிந்துவிடும்..

கர்வமெல்லாம்
அவளது அருகாமை கிடைக்க..
மண்டியிடும்!

தளிர் அவள் வாசனை பட்டு
பாறை நீ படிந்து போவாய்..அவளே அகிலமாவாள்
உன் அன்னை  கூட
அந்நியமாவாள் !

நீயோ புதிதாய்
கண்ணியம் பழகுவாய்..

உங்களுக்குள் என்ன நடந்தாலும்
மூளைக்குள் நிரப்பி
கவிதையாய்
இறக்குவாய்...

எப்படிச் சொன்னாலும்
தீராது...

தோள்களில்
இறகு முளைத்தும்
பறந்திட முடியாத
இந்த நிலையை....!!!

Oct 19, 2010

கண்ணுறக்கம் களைத்தவள்

காலையில் கண் விழித்த போது
கண்மணி
உன் நினைவு வந்து நெருடுமானால்
என்ன செய்வேன்?

உயிர் வெடுத்து போகிறது
உன் வென்முகம் காணாது
என் விடியலில் கூட
இருள் வந்து கவ்வுது!

நீயென்ன தேவதை வம்சமா
நெருப்பின் துகள்களாய்
நெஞ்சுக்குள் பரவுகிறாய்
எப்படி தாங்குவேன்?

உன் கால்களில் என்ன
விண்மீன் சங்கலியா
என் தலையணையில்
புரையேற்றுகிறாய்!!

தூயவளே
துளியும் வருத்தமின்றி
மின்னல் முகம் கொண்டு
மழை சிரிப்பு கொட்டுகிறாய்..

எங்கோ இருந்து கொண்டு
என்னுறக்கம் கெடுத்தவள் நீ..

கவி ஆயிரம் சொன்னாலும்
தீராது என் காதல் பிணி..

காதலுடன் மோகமும் தாக்கி
காலனை நான் முட்டும் நேரம்
அடைந்துவிட்டேன்..

ஏளனமாய் பார்க்கிறாய்

உன் மென்குரளும்
புன்சிரிப்பும்
கடைக்கண் பார்வையும்
குளிர் சுவாசமும்
தீண்டலும்
ஓரிரு முத்தமும்

இல்லாது வாய்த்ததில்
உலகம் என்னை விட்டு சுழலுது

ஒரே வரியில் சொன்னால்

உயிர் இருந்தும் இல்லாது ஒழிந்தது!!!!

Oct 18, 2010

Link to follow with Facebook

http://www.facebook.com/pages/Kavibharathi-kavidhaigal/148891928489087?v=app_2373072738#!/pages/Kavibharathi-kavidhaigal/148891928489087?v=wall

நிலாவும் நீயும்...

நிலாவும் நீயும்
ஒன்றென உரைத்தேன்..

"போய் தொலை" என்று வெட்கம் உதிர்த்தாய்..

"உன்னில் தொலையவா
மண்ணில் தொலையவா".. என்றேன்..

"பொய் கவி நீ" என்று
புலம்பிச்சிரித்தாய்...

அன்று
இன்னுமொரு கவிதை
ஜனனம் கண்டது!

இப்படி உன்னோடு
எனக்கிருக்கும் காதலும்
நானும்

பிதற்றுகையில்...

தோள்களில் பாரம் தாங்க முடியாமல்

சோர்ந்து போகின்றன
என் கவிதை தாள்கள்...!!!

Oct 6, 2010

காதலென்று நானறிவேன்!

உண்மையை சொல்லியிருக்கலாம் நீ
என் தோட்டங்கள் பூத்து குலுங்கியிருக்கும்..

என் பாதைகள்
தெளிவு பட்டிருக்கும்..

ஞாபகம் இருக்கிறதா
உன் புன்னகை பார்த்து பார்த்தே

என் பசி மறந்த தருணங்கள்?

கரிசனத்தோடு பேசுவாய் நீ
அது காதலோ என
கனவு கொண்டேன் நான்!

மழை வந்து விடுகிற நாட்களில்
ஒற்றை குடையோடு

என்னை உரசி நடந்தாயே
அதற்கு என்ன அர்த்தம்?

என் பிறந்தநாளன்று
வாழ்த்தோடு
முத்தமும் வார்த்தையே என் நெற்றி சிலிர்க்க...

அதற்க்கு உன் மனதில் என்ன அர்த்தம்?

நான் கோபப்படும் போதெல்லாம்
என் தோளோடு தலை சாய்த்து

மன்னிப்பும் கேட்பாயே அது ஏன்??

ஆசையாய் ரோஜா பூ கொடுத்த போதெல்லாம்
முகம் சிவந்தாயே..

உண்மையில் நமக்குள் ஒன்றும் இல்லையா?

உன்னுடனான என் காதலை
நான் கொஞ்சி மகிழ்ந்தேன்...

சிரித்துக்கொண்டே செத்தேன்!!

நீ எனக்கான ஒற்றை பூ..
உன்னை பறிக்க
பத்தடி தூரத்தில் இருந்து
பரிதவித்தேன்!

நீயோ தேவதைகளின் உறவுக்காரி!!

எப்படி நெருங்க?

என் வயதும் மனதும்..
பதறிய வேதனை..

நீ அறிவாயா?

ஒரு நாள் உன்னிடம்
காதலை மென்று விழுங்கி

சொல்லி விட்ட போது...

குழந்தையை பிரசவித்த தாய்
கண்ட நிம்மதி என் உயிரோடு!

அந்த கனம்..
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதே
மறந்து போனது!

உன் பதிலை கேட்கவே..
எனக்கு காதுகள் படைக்க பட்டது
போன்று..

ஆனந்தமாய் காத்திருந்தேன்!

முகிலே...

உனது சாரலில் நனைந்து
உயிர் கொள்ளும் ஒரு தாவரம் நான்..

எனக்கு மழை தர மறுத்தாய்!!!

"முடியாது" என்றாய்!!
முடிந்தது நம் காதல் அல்ல...

என் மூச்சு!!

நமக்குள் இருந்தது
வெறும் தோழமை தான் என
என்னை கடிந்து விட்டு

மறைந்தாய்... மறந்தாய்!!! 

என்னை மீண்டும் சந்தித்தால்

ஒன்று மட்டும் சொல்..

நீ என்னிடம் கொண்டது
நட்பா காதலா??

நட்பென்று பொய்யுரைத்து நீ
போன போதும்...

பார்த்து பார்த்து
காதல் அறிந்த

உன் இரு விழிகள் பேசியது உண்மையை..

உன் இதழ்கள் சொன்னது பொய் என
ஒரு முறை சொல்லிவிடு

பிறகு நீ பிரிந்தாலும்
சம்மதம்!!

நம் காதல்..
என் நிழலில்

களைப்பாறும்!!!

Oct 5, 2010

மல்லிகை உயில்..

உலகில் நான் இன்னும்
உயிர் கொட்டி போகாது இருப்பதற்கு-

அன்னமே நீ தான்
மாபெரும் காரணம்!

இல்லையேல் எனக்கேது
இந்த உயிர் வரம்??

தாய் தந்தை
முகம் அன்றி

வேறெதுவும் அறியவில்லை..

தமிழ் மொழி மட்டும்
போதுமென
தவம் செய்திருந்த

என்னை...
ஒரு நொடி பார்வையில் உருக்கி போட்டாய்..

மலர் பல வந்து
என் நாசி தொடுகையில்

மல்லிகையே நீயல்லவா..
என்னை மிரட்டிச்சிரிதாய்??

மெதுவாய் பறித்தாய்!!!

உன் பார்வையில்..
தொடுதலில்..

காதலை புரிய வைத்தாய்!

உனது பல்லாங்குழி பார்வையும்..
சடுகுடு பேச்சும்

சாவிலும் மறக்காது!

காற்று உன் கூந்தல் கலைத்து
மேன்புரும் போதெல்லாம்

நானும் காற்றாய் மாறியதுண்டு!

இன்று நிகழ்காலம்
நெஞ்சுக்குள் நெருப்பை கட்டும் போது..

சிரியென ஏவுகிறாய்

அன்பே..

உன்னை
உன் கன்னக் குழியை

நினைவு படுத்தி தேய்கிற நிலா மீது சத்தியமாய்...
சொல்கிறேன்..

நீ இல்லாத இத்தருணம்...

என்னை கூறு போட்டு
கொல்கிறது தனிமை..

சிரிக்க சொல்லாதே!

இறக்க சொல்

நீ என்கிற அந்த ஒற்றை
நினைவோடு...

மரணத்தை அள்ளி முத்தமிடுவேன்!

Oct 2, 2010

பிரிதல் நிமித்தம்..

இது என்ன
என் இமை கூட
பாரமாய் போகிறது...

நீ இல்லாமல் போன
உண்மையை நினைத்து

நடக்கையில்..

புதிதாய் வலிகிறது..

பூ கூட உதைக்கிறது...

எத்தனை முறை
நீ என் முகத்தில் அடித்தாலும்...

என் இதயம் யாசிப்பது என்னவோ..

உன் காலடி  தடம்...

நீ என்னை பிரிகையில்
உன் உள்ளங்கையோடு

ஒட்டி விடுகிற என் உயிரை...

பத்திரமாய் வை....

மீண்டும் சந்திக்கும் வரை...

Oct 1, 2010

நீயென படுவது...

உன்னை எண்ணி
உறங்குகையில்

தலையணைக்கடியில் புரையேறும்
உன் நினைவுகளை

எப்படி உதறுவேன்..

உயிருக்குள் ஒரு அணுவாய்

ஒட்டிக்கொண்டாய்...

உன்னை நீங்கினால் என் உயிரும் உதறி போகும்!!!