Oct 6, 2010

காதலென்று நானறிவேன்!

உண்மையை சொல்லியிருக்கலாம் நீ
என் தோட்டங்கள் பூத்து குலுங்கியிருக்கும்..

என் பாதைகள்
தெளிவு பட்டிருக்கும்..

ஞாபகம் இருக்கிறதா
உன் புன்னகை பார்த்து பார்த்தே

என் பசி மறந்த தருணங்கள்?

கரிசனத்தோடு பேசுவாய் நீ
அது காதலோ என
கனவு கொண்டேன் நான்!

மழை வந்து விடுகிற நாட்களில்
ஒற்றை குடையோடு

என்னை உரசி நடந்தாயே
அதற்கு என்ன அர்த்தம்?

என் பிறந்தநாளன்று
வாழ்த்தோடு
முத்தமும் வார்த்தையே என் நெற்றி சிலிர்க்க...

அதற்க்கு உன் மனதில் என்ன அர்த்தம்?

நான் கோபப்படும் போதெல்லாம்
என் தோளோடு தலை சாய்த்து

மன்னிப்பும் கேட்பாயே அது ஏன்??

ஆசையாய் ரோஜா பூ கொடுத்த போதெல்லாம்
முகம் சிவந்தாயே..

உண்மையில் நமக்குள் ஒன்றும் இல்லையா?

உன்னுடனான என் காதலை
நான் கொஞ்சி மகிழ்ந்தேன்...

சிரித்துக்கொண்டே செத்தேன்!!

நீ எனக்கான ஒற்றை பூ..
உன்னை பறிக்க
பத்தடி தூரத்தில் இருந்து
பரிதவித்தேன்!

நீயோ தேவதைகளின் உறவுக்காரி!!

எப்படி நெருங்க?

என் வயதும் மனதும்..
பதறிய வேதனை..

நீ அறிவாயா?

ஒரு நாள் உன்னிடம்
காதலை மென்று விழுங்கி

சொல்லி விட்ட போது...

குழந்தையை பிரசவித்த தாய்
கண்ட நிம்மதி என் உயிரோடு!

அந்த கனம்..
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதே
மறந்து போனது!

உன் பதிலை கேட்கவே..
எனக்கு காதுகள் படைக்க பட்டது
போன்று..

ஆனந்தமாய் காத்திருந்தேன்!

முகிலே...

உனது சாரலில் நனைந்து
உயிர் கொள்ளும் ஒரு தாவரம் நான்..

எனக்கு மழை தர மறுத்தாய்!!!

"முடியாது" என்றாய்!!
முடிந்தது நம் காதல் அல்ல...

என் மூச்சு!!

நமக்குள் இருந்தது
வெறும் தோழமை தான் என
என்னை கடிந்து விட்டு

மறைந்தாய்... மறந்தாய்!!! 

என்னை மீண்டும் சந்தித்தால்

ஒன்று மட்டும் சொல்..

நீ என்னிடம் கொண்டது
நட்பா காதலா??

நட்பென்று பொய்யுரைத்து நீ
போன போதும்...

பார்த்து பார்த்து
காதல் அறிந்த

உன் இரு விழிகள் பேசியது உண்மையை..

உன் இதழ்கள் சொன்னது பொய் என
ஒரு முறை சொல்லிவிடு

பிறகு நீ பிரிந்தாலும்
சம்மதம்!!

நம் காதல்..
என் நிழலில்

களைப்பாறும்!!!

1 comment:

  1. athithya.............nalla iruku ka.......

    ReplyDelete