Oct 25, 2011

என்னால முடியல....

என்னடி நினைச்ச 
என் நெஞ்சுக்குள்ள குதிச்ச 
பூவா சிரிச்சே 
ஏமாத்தி தொலைச்ச

'கற்கண்டா இருக்க'னு சொன்னதும் 
'அப்படியா'னு வெறிச்ச...

உனக்காக சாவேன்னு சொன்னதும் 
'அடிப்பேன்'னு முறைச்ச... 

செக்கசெவப்பா நீ இருந்த 
கண்ணுக்குள்ள நெருப்பா தெறிச்ச.... 
'பிடிச்சிருக்கு'ன்னு பின்னாடி வந்த.... 
கையெல்லாம் பிடிச்சு நடந்த.....

ஒத்த சொல்லு நீ பேச மாட்டியான்னு 
செத்து பொழச்ச என்ன 

பிரிஞ்சு போக தோணுச்சா 

காதல காட்டி மோசம் செஞ்ச 
கண்ண பாத்தே களவு செஞ்ச 
எதுக்கிந்த துரோகம் செஞ்ச... 

யார கேட்டு என்ன கவுத்த.... 
யாருக்காக நெஞ்சில மிதிச்ச..

எந்த ஊருல நீ இருந்தாலும் 
இந்த மனசுல தான் இருப்ப... 

கண்ண மூடி மண்ணில் போகையில.... 
என் உள்ளங்கையில ஒரு படி மண்ணா
உன்னையும் சுமப்பேன் 

உன்ன போல கண்ணப் பாத்து 
பொய் சொல்ல 
என்னால முடியல.... 








தீபத் திருநாள்

பூப்பூவாய் பொழியும் 
நெருப்பு பூக்கள்.... 
கலர் கலராய் விரியும் 
மத்தாப்புக்கள்... 

அளவின்றி செலவு... 
ஆண்டுக்கு ஒரு முறை... 

காகிதங்களோடு 
வெடிமருந்து கோர்க்கும் 
பிஞ்சு கைகள்... 
மட்டும் 

காண்பதே இல்லை 
திருவிழா... 

இனிப்பும் இன்பமும் 
நட்பும் சுற்றமும் 
கனிவும் கவனிப்பும் 

நிறைந்து வழியும் 
தீபத் திருநாள் 

தெருவில் கையேந்தும் 
முதியோர்கள் எல்லாம் 
ஏந்திய கைகளில் வெறுமையை சேர்க்க... 

பண்டிகையும் வருகிறது.... 

பலவாறாய் கொண்டாடி 
பணமெல்லாம் கரியாகி 
ஒருவாறாய் ஒய்ந்திடும்  முன்னே 

கருவாட்டு குழம்பின் 
வாசனையை மட்டும் 
முகர்ந்தே உயிர் வாழும் 
ஏழையின் முகத்தில் 

ஒரு நொடி சிரிப்பை விதைத்து... 
பின்...

பட்டாசு வைக்கலாம் 

கரியான வறுமைக்கும்... 
புகையான வேற்றுமைக்கும்....