Nov 12, 2012

என் கவிதைக்கான காரணங்கள்...

அதிகாலை இருட்டு
குளிர்கால மழை

வானப் போர்வை விலக்கும் சூரியன்
பனி குவிந்த மலர்கள்

பாதி சிவந்த மேகம்
கண்களில் திரளும் கண்ணீர்

காதலின் முகம்
தரப்படாத முத்தம்

குளத்தங்கரை பறவைகள்
நிலா வழிகிற பொழுது

நட்சத்திரங்கள் படர்ந்த பிரபஞ்சம்
மணல் தரித்த பாலை

உலகத்தின் அசாதாரண அசைவு
ரயில் பயணத்தின் தனிமை

கோபத்தின் விளிம்பில் வெடிக்கும் மௌனம்
நெஞ்சை பிழியும் சோகம்

மனதை குலுக்கும் நட்பு
அறிவை துலக்கும் புத்தகம்

உள்ளம் உடைய அழும் போது
அன்பு வடிக்கிற நட்பு

கடக்கும் குழந்தையின் அழுகை
பாதியில் நின்றுவிட்ட  கவிதை..

பருவமெய்த பெண்
நிலத்தை வானோடு கட்டிடும் மழை

முதுமையின் விவேகம்
கள்ளமற்ற எழுத்து

கருணை மறந்த கடவுள்
தூக்கமில்லா இரவு

துடிதடங்கும் மீன்கள்
சொன்னாலும் தீராத வறுமை

இந்த பூமி கொண்டுள்ள பொறுமை
மொட்டு விரியும் அழகு

இதயத்தை இதமாகும் கடலோர காற்று
தேசியம் பேசிய புனிதர்கள்

தினம் கெட்டு வரும் அரசியல்..

இன்னும் இன்னும் நிறைய இருக்கின்றன
என் கவிதைக்கான காரணங்கள்...



  

No comments:

Post a Comment