Nov 13, 2012

கண்ணீர் ஆறுதல்

அந்தி சிவந்த
அந்தவொரு பொழுதில்
வந்து போனாய் என் வாசலோடு ..

என்ன குறை கண்டுவிட்டாய் என்று
புறப்பட்டாய் நேரத்தோடு..??

என் வீடு வரும் வழியில்
பூக்கள் இல்லை என்பதாலா?

உற்று பார் நீ
உனக்காக என் உதிரத்தை உரமாக்கி
உயிர் பூக்களை
வளர்த்திருக்கிறேன்...

ஒரு பயனுமின்றி இறந்திருப்பேன்

நல்ல வேலை
நீ வந்து அர்த்தமூட்டினாய்...

கவிதையில் கண்ணுறக்கம் தொலைத்திருந்தேன்
நீயல்லவா கனவுகளின் தேவை சொல்லி
உறங்க கற்றுத் தந்தாய்..

நெல்லமுதே..

நீ அழுதாயே
அன்று என் ஆயுள் ரேகை
தேய்ந்தது..

உன்னைப் போல் வேறெதுவும்
கள் வெறி தராது..
தராது...

என்னை கவியாக்கிய கற்பனையே
உன் பெயரை யாரேனும் அழுத்திச் சொல்லிவிட்டால்

அழுது விடுவேன்..

உன் நிழலை கூட
யாரும் நெருங்க நேர்ந்தால்
பல்லாங்குழி பரல்கள் போல்
என்னுள்  அரும்பும் ரத்தம்..

என் இலையுதிர் காலங்களை
முடித்து வை

ஒற்றை புன்னகையில்
காய்ந்த உணர்வுகளுக்கு
மருந்து போடு..

நீ சிரிக்க
என் அழுகைகள் காரணமாகுமேன்றால்..

விழிகள் இறக்க அழுதிட சம்மதம்...

உன் நினைவுகள் சுமந்து
நான் மரிக்கும் போது

கல்லறைகளும் எனக்காக கண்ணீர் வடிக்கும்...



No comments:

Post a Comment