நெருப்பு பூக்கள்....
கலர் கலராய் விரியும்
மத்தாப்புக்கள்...
அளவின்றி செலவு...
ஆண்டுக்கு ஒரு முறை...
காகிதங்களோடு
வெடிமருந்து கோர்க்கும்
பிஞ்சு கைகள்...
மட்டும்
காண்பதே இல்லை
திருவிழா...
இனிப்பும் இன்பமும்
நட்பும் சுற்றமும்
கனிவும் கவனிப்பும்
நிறைந்து வழியும்
தீபத் திருநாள்
தெருவில் கையேந்தும்
முதியோர்கள் எல்லாம்
ஏந்திய கைகளில் வெறுமையை சேர்க்க...
பண்டிகையும் வருகிறது....
பலவாறாய் கொண்டாடி
பணமெல்லாம் கரியாகி
ஒருவாறாய் ஒய்ந்திடும் முன்னே
கருவாட்டு குழம்பின்
வாசனையை மட்டும்
முகர்ந்தே உயிர் வாழும்
ஏழையின் முகத்தில்
ஒரு நொடி சிரிப்பை விதைத்து...
பின்...
பட்டாசு வைக்கலாம்
கரியான வறுமைக்கும்...
புகையான வேற்றுமைக்கும்....
I like this. shall i use this in to my greeting cards (not for commercial purpose)to be posted for my family members.
ReplyDeleteKind regards
P.Parthiban
ponmudiparthiban@gmail.com