May 15, 2011

என் காதலின் எச்சங்கள்

உன் விழி தாண்டி
வழிந்து போன
துளிகளுக்கு என்ன தெரியும்

உன் கன்னம் கடந்தவை எல்லாம்
வெறும் கண்ணீர் அல்ல..
என் காதலின் எச்சங்கள்.....

கண்களின் விளிம்பில்
நீ தேக்கிய சோகமென்ன
என் வாழ்கையின் அர்த்தமே....

விழி நீரை விலக்கியபடி
நீ கலங்க
உன் உள்ளங்கையில் ஒட்டி இருக்கும்
என் சந்தோஷங்கள் 
கலைந்து போகிற 

இந்த நொடியில் 

உன் கன்னம் துடைக்க
ஓடி வந்த 
என் விரல்களின் இடுக்கில்

முளைத்து கொண்ட இதயத்தை 
என்ன சொல்லி ஆற்றுவேன்?? 

நீ துடித்தழுத கனத்தில்
துண்டுதுண்டாய் போனேன் 

மீண்டும் உன் கண்களில் 
கண்ணீராய் உருண்டு போனேன்.... 

நீ என்பது மட்டும் 
என் உலகத்தின் பொருளான போது.... 
நீயே உடைந்தழுவாயெனில்
என் உலகமல்லவா உடைந்து போகும்???

நீ விம்மி அழுகையில் 
குழந்தையானாய் 
உன்னை கொஞ்சுகின்ற அவசரத்தில்.... 

மோகம் துறந்த
தாய்மையை உணர்ந்தேன் நான்.....

சுவாசத்தில் நிறைந்தவளே....
உன்னை தாக்குகிற எந்த சோகமும் 
என் காதலோடு  மோதும் போது
தோற்றுப் போகும்

சிரித்திடு

உன்  கண்ணீரின் இடுக்கில்
நசுங்கிச் சாவதில்
ஆர்வமில்லை எனக்கு...

8 comments:

  1. கவிதை நல்லா இருக்கு
    இன்னும் எழுது பாரதி

    //உனக்குள் நானும்
    எனக்குள் நீயும்
    ஒருகணம்
    நிலைத்து போன
    அந்த விழிகளின் வியர்வை
    துளிகள்
    உனக்காக நான் கண்ட
    கனவுகளின் விம்பங்கள்
    அனைத்தும் காதலின் எச்சங்கள் தானடா
    என் கண்களை நீ பறித்து சென்ற பின்பும்............//

    ReplyDelete
  2. super d :) :) :): ) chance ye illa

    ReplyDelete
  3. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_3765.html

    ReplyDelete
  4. கண்ணீரின் வழியலில் உருவான கவிதையில் காதல் வழிகிறது. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. //நீ என்பது மட்டும்
    என் உலகத்தின் பொருளான போது....
    நீயே உடைந்தழுவாயெனில்
    என் உலகமல்லவா உடைந்து போகும்???//

    மிகவும் அருமை.

    ReplyDelete
  6. "உன் விழியில் நீர் கண்டதும்
    என் சோகங்கள் கூட
    ஒழிந்து கொண்டன
    இப்போதெல்லாம் அவை
    வெளிவரவே அஞ்சுகின்றன"

    சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I


    --

    ReplyDelete
  7. உணர்வுபூர்வமான கவிதை
    வார்த்தைகள் மிகச் சரளமாக உணர்வுடன் கைகோர்த்து
    கவிதையை உச்சத்தில் நிறுத்திப்போகிறது
    மனங்கவர்ந்த படைப்பு
    தொடர்ந்து வருகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete