காத்திருந்து
கவிதை செய்வதும்
நீ சிரிக்கும் போது
உன் இதழ்களை பாராட்டி
முத்தமிடுவதும்
தூக்கம் தொலைத்து
எழுகையில்
உன் மூச்சுக் காற்றில்
நனைவதும்
மனசெல்லாம் நீயிருக்க
மழை காற்றில் சிக்கிய பட்டமாய்
பறப்பதுவும்
ஊடல் கொள்கிற பொழுதில்
தோளில் சாய்ந்து அழுவாய்
அதில் கரைந்து சர்க்கரையாவதும்
நீ இம்சை என்று தெரிந்தும்
இன்னும் இன்னும்
ஏக்கம் கொள்வதும்
பிடிக்கிறது...
ஏக்கம் கொள்வதும்
பிடிக்கிறது...
எனது நேற்றையும் இன்றையும்
நிரப்பிய தேவதையே....
உன் கை பிடித்து போனால்
தூரமெல்லாம் பக்கமாகும்...
உன் கை பிடித்து போனால்
தூரமெல்லாம் பக்கமாகும்...
என் இதயத்தில் ஒட்டிக் கொண்ட
உன் நகப்பூச்சின் வண்ணமெல்லாம்
காயவும் மறுக்கிறது....
அழியவும் மறுக்கிறது
போதும் போதும்
என்றாலும்
பொழிந்து கொட்டும் காதலே
உன்னால் உனக்காக
உயிர் கொள்கிறேன்...
உன் மௌனங்கள் முடிகிற
நொடிகளுக்காக காத்திருப்பேன்
சந்தோஷமாய்...
அந்த மௌனங்களின் முடிவில்
எனக்காக சில வார்த்தைகள்
பிறப்பெடுக்குமே
அதற்காக....
காயவும் மறுக்கிறது....
அழியவும் மறுக்கிறது
போதும் போதும்
என்றாலும்
பொழிந்து கொட்டும் காதலே
உன்னால் உனக்காக
உயிர் கொள்கிறேன்...
உன் மௌனங்கள் முடிகிற
நொடிகளுக்காக காத்திருப்பேன்
சந்தோஷமாய்...
அந்த மௌனங்களின் முடிவில்
எனக்காக சில வார்த்தைகள்
பிறப்பெடுக்குமே
அதற்காக....
//உன் மௌனங்கள் முடிகிற
ReplyDeleteநொடிகளுக்காக காத்திருப்பேன்
சந்தோஷமாய்...
அந்த மௌனங்களின் முடிவில்
எனக்காக சில வார்த்தைகள்
பிறப்பெடுக்குமே
அதற்காக....
Nice dear :)
superb dear:):):)
ReplyDeleteகவிதை எழுத தூண்டும் வரிகள்; நித்திரையிலும் நினைவூட்டும் கவித்துவங்கள்.. அருமை என் தோழியே ..
ReplyDelete