Oct 19, 2010

கண்ணுறக்கம் களைத்தவள்

காலையில் கண் விழித்த போது
கண்மணி
உன் நினைவு வந்து நெருடுமானால்
என்ன செய்வேன்?

உயிர் வெடுத்து போகிறது
உன் வென்முகம் காணாது
என் விடியலில் கூட
இருள் வந்து கவ்வுது!

நீயென்ன தேவதை வம்சமா
நெருப்பின் துகள்களாய்
நெஞ்சுக்குள் பரவுகிறாய்
எப்படி தாங்குவேன்?

உன் கால்களில் என்ன
விண்மீன் சங்கலியா
என் தலையணையில்
புரையேற்றுகிறாய்!!

தூயவளே
துளியும் வருத்தமின்றி
மின்னல் முகம் கொண்டு
மழை சிரிப்பு கொட்டுகிறாய்..

எங்கோ இருந்து கொண்டு
என்னுறக்கம் கெடுத்தவள் நீ..

கவி ஆயிரம் சொன்னாலும்
தீராது என் காதல் பிணி..

காதலுடன் மோகமும் தாக்கி
காலனை நான் முட்டும் நேரம்
அடைந்துவிட்டேன்..

ஏளனமாய் பார்க்கிறாய்

உன் மென்குரளும்
புன்சிரிப்பும்
கடைக்கண் பார்வையும்
குளிர் சுவாசமும்
தீண்டலும்
ஓரிரு முத்தமும்

இல்லாது வாய்த்ததில்
உலகம் என்னை விட்டு சுழலுது

ஒரே வரியில் சொன்னால்

உயிர் இருந்தும் இல்லாது ஒழிந்தது!!!!

No comments:

Post a Comment