Oct 27, 2010

காகிதக்காதல்

இன்னொருவனை நீ மணந்தாய்
என்ற போதும்
இன்றளவும் உன்னை நினைத்து
உயிர் கொள்கிற உரிமையில்
எழுதுகிறேன் இக்கவிதை!!

உன் நினைவுகள் கொண்டு
நான் தாள் தொடுகையில்
கவிதை பூக்களாய் சிதறி விழும்!

எப்படிச்சொல்ல
என்னுயிராய் இருந்தவள் நீ

இன்று முகமறியா தொலைவில்
தொலைந்தே தான் போன கதை...

மாற்றான் தோட்டத்து  மல்லிகைக்கு
ஆசைப்படும்
பட்டுப்பூச்சியாய்
திரியவிட்டாய்...

நான் உன்னை பிரியக்கூடுமென்று
பேச்சுக்கு சொன்னால் கூட

தேம்பி அழுது
என் மார்பு நனைத்த நீயா

என்னை விட்டு வெகுதூரம் போனாய்
என்று எண்ணிவிட்டால்

வருகிற என் விழி நீரை துடைக்க
விரல் இல்லை அன்பே..

"இவளுடனே இந்த கணம்
இறப்பதுவும் மேல்" என்று
இச்சை கொண்டேன்..

இப்பொழுது
நீ ஆசைப்பட்டதெல்லாம் செய்து
பைத்தியம் போல் உளறுகிறேன்..

சொல்லி வைத்த காதல் எல்லாம்
என் வீட்டு முற்றத்தில்
கவிதையென தூக்கம் கொள்ள

"நீ இல்லாத ஒரு வாழ்க்கை
வாழவே மாட்டேன்" என்று
விம்மியழுத நீயோ

ஒற்றைக் குழந்தையுடன்
ஒரு கிழக்கில்
சிக்கிவிட்டாய்

காகிதத்தில் உறங்கினாலும்
என் காதலுக்கு
உயிர் இருக்கும்...

காலம் உள்ள வரைக்கும்!

5 comments: