நீ தேன் என்று எண்ணிவிட்டேன்..
தீந்தனலாய் எனை எரித்தாய்..
உன் பால் முகம் கண்டு
நான் வாழ
பல நாளாய் கனவு கொண்டேன்
பவுர்ணமி நீயோ
என் வானம் வெறுத்துவிட்டாய்!
பூவிழியாள்
உன் பார்வை
யாசித்த ஒரு வண்டு நான்..
ஏனோ என் உயிர் வாசம்
கொய்துவிட்டாய்!
நீ என்ன நினைத்துவிட்டாய்??
நிலம் போல பொறுமை கொண்டேன்..
தினம்
என் உணர்சிகளோடு ஆட்டம் போட்டாய்..
உன் விழிச்சிறையில்
எனை அடைத்து
கண்ணாம்பூச்சி காட்டுகிறாய்..
கவிதை பல பேச வைத்து
கற்பனையில் சாக வைத்தாய்
தளிரே
உன் அழகுக்கு அடிமையானேன்..
அதை கூட மறந்துவிட்டாய்..
நீ தான் என் உலகமென்று
உன் காலடியில் சருகானேன்....
நீயோ உன் கால்களாலும்
எனை மிதிக்க மறுத்துவிட்டாய்..
கொஞ்சமும் சோர்வின்றி
மீண்டும் மீண்டும்..
உன் பாதங்களை வருடுகிறேன்...
பாவை உன் மனதின்
எங்காவது ஒரு மூலையில்...
என் காதல் வேரூன்றும் ஒருநாள்
அது வரை..
உன் காலடியில் சருகாகவே
காத்திருப்பேன்!
superb..
ReplyDelete