Oct 31, 2010

நீயே சொல்

என் வேரின் முதல் பொழிவே
எனதிரு விழியின்
முதல் கனவே..
எனக்கான கண்ணீரில் கசிகிற இனிப்பே..

என் காதலை படிக்கும்
கல் கூட கலங்கும்

உனக்கு மட்டும் ஏனோ
கல்லே மனமாய் வாய்த்தது!

எவரெஸ்ட் உச்சியிலிருந்து
குதிக்கச்சொல்லி இருந்தாலும்
அது சாத்தியப்பட்டிருக்கும்...

உன்னை நேசிப்பதாய்
சொல்லி முடிப்பதற்குள்
முற்று பெற்றது என் உயிர்..

காதலை நீருபிக்கச் சொன்னாய்
என் மௌனப்பெருங்கடலே...
எப்படி நிரூபிக்க வேண்டும்..

சர்க்கரை வானம் பொழியும்
தறி கொண்டு எழுதிய
கடிதம் வேண்டுமா...

நித்திரை பல தொலைத்து
நான் கோர்த்த சித்திரை கனவுகள் தான் வேண்டுமா..

இத்தனை வருடமும்
நான் செய்த தனிமை தவம் கலைதத் தூரிகையே...

கன்னத்தில் குதித்து ஓட
நதிகளேதும் வேண்டுமா...

உன் பால் தேமலில் பதுங்கி நிற்க
சில நிலாத்துண்டு வேண்டுமா..

 கண்ணீர் கொண்டு நான் படைத்த
கவி ஏதும் வேண்டுமா...

என் ரத்தக்கறை படிந்த வாளேதும் வேண்டுமா..

உனது உள்ளங்கையோடு விண்மீன்கள் வேண்டுமா...

அரும்பில் கூட அழகாய் சிரிக்கும்
மல்லிகை தோட்டம் வேண்டுமா..

வீணையை மீட்டவும் கத்தி எடுத்த
என் முரட்டு மனதை

உன் பூவிரலால் தொட்டு கலைந்தாய்...

என் மலர்க்காடே
சொல் நீ...

தீயேதும் தின்று நான் செரிக்க வேண்டுமா...
பல மேகமுடைத்து பந்தல் ஏதும் பூட்ட வேண்டுமா...

என்னை முழுதாய்
விழுங்கி விட்டு...

ஒன்றுமே செய்யாதது போல்
பார்க்கிறாய்...

என்ன தான் செய்தால்
என்னை ஒப்புக்கொள்வாய் நீ....????

No comments:

Post a Comment