என் அருகிலிருந்தாயாடி நீ...
அதனால்
அரும்பாய் இருந்தபோதே
பயிரிடப்பட்டதல்லவா இந்த கவிதைக்கான விதை...
நிலாவை மறைக்கிற மேகமாய்
முட்டி வரை விரிந்த
சீருடையில்
தோளுக்குக் கீழ் கைக்குட்டையும் குத்திக் கொண்டு
உன் தந்தையின்
கைப்பிடித்து வருவாய்...
நீ வந்தவுடன் தான்
என் அன்றைய நாளே தொடங்கும்...
உன் வீட்டுக்குள் நடந்த
எல்லாமே எனக்கும்...
என் வீட்டுக்குள் நடந்த
எல்லாமே உனக்கும்.....
தெரிந்திருந்தது !!!
நட்புக்கு அர்த்தம் தெரியாத
வயதில் கூட...
உன் மீது நானும்
என் மீது நீயும்
கொண்டிருந்தோமே...
அந்த உணர்வுக்கு பெயர் என்ன... ?
இந்த பூமியோடு
வானமும் காற்றும் நீரும் நெருப்பும்
கொண்டது
என்ன உறவோ....
அது தான் நம்முள்ளும்
இருந்திருக்க வேண்டும்...
எதிர்பார்ப்புகள் எதுவுமில்லாத
ஒரு உன்னத அன்பு...
உனக்குப் பிறகு யாரும் காட்டாதது!!!
நீ நிலாவை பார்த்து
சோறு உண்ட நாள் தொட்டு
உன்னை எனக்கு தெரியும்...
இன்று எந்த திசையில் இருக்கிறாய்
சிநேகிதி?
உன் பெயர் பதித்த
எதை பார்த்தாலும்
உடனே என் ஞாபகக்குமிழில்
வந்து உட்காரும் உன்னை..
தேடிப் பார்கிறேன்...!!!
உன் அருகிலேயே இருந்தேன்
அன்றெல்லாம் சத்தியமாய் தெரியாது
இப்படி ஒரு பிரிவு வந்து
என் கண்களில் இருந்து உன்னை
அருத்தெடுக்குமென்று...
உனக்கெப்படித் தெரியும்
உன்னை நான் நினைப்பது?
மழையாய் வந்து
என்னை தொடப் பார்க்கிறாய்...
ஒருவேளை நீயும் அழுகிறாயோ..??
என் ஜன்னல் ஈரமாகும்
உன் சாரல் பட்டு...
அப்போது
கொஞ்சம் என் காகிதங்களும்
உன் தொடுதலில் நனையட்டும்....
உன்னைப் பார்க்க காத்திருக்கும்
நானும் என் கவிதைகளும்
உன் வார்ப்புகளுக்கு
என்றும் அடிமை..
தோழியாய் வந்தவள் நீ
என் தோளில் கைப்போட்டு
நடக்கையில்....
எனக்குள் ஒரு அபார சக்தி
இருப்பதை உணர்ந்தேன்....
இன்று உன்னைப் பிடுங்கிச்சென்ற
விதியை எண்ணி சோர்கிறேன்...
இத்தனை பெரிய உலகில்
உன்னை மட்டுமே..
என் இதயத்திற்கு பக்கத்தில் வைத்தேன் என் அம்மாவுக்குப் பிறகு
நீ தான் ஒருநாள் உணவூட்டினாய்...
உன் பிஞ்சுக்கையால் நீ அள்ளிய பருக்கைகளில்
பாதி மட்டுமே உன் வாய் வரை வந்தது...
பதினாறு வயது வரை...
என் வீட்டையும் மனசையும்
அலங்கரித்த உன்னை...
நான் தேடாத திசை இல்லை...
இன்றும் மல்லிகையைப் பார்த்தால்
இது அவளுக்குப் பிடித்த பூ
என்று நினைப்பதுண்டு....
உனக்கு பிடித்த எல்லாமே
என் அருகில் இருந்து கொண்டு
உனது இல்லாமையை அதிகப்படுத்தினால்....
என்ன செய்வேன்..?
காலம் உன்னை தூக்கிச்சென்ற
தொலைவு
நான் அறியேன் தோழி...
நீ எங்கிருந்தாலும்
இந்த கவிதை உன்னால் வாசிக்கப் படுவதற்காக
காத்திருக்கிறது!!!
என்னைப் போலவே!
//உனக்கெப்படித் தெரியும்
ReplyDeleteஉன்னை நான் நினைப்பது?
மழையாய் வந்து
என்னை தொடப் பார்க்கிறாய்...
ஒருவேளை நீயும் அழுகிறாயோ..?? //
கவிதை அருமை
உன் பெயர் பதித்த
ReplyDeleteஎதை பார்த்தாலும்
உடனே என் ஞாபகக்குமிழில்
வந்து உட்காரும் உன்னை தான்....
தேடிப் பார்கிறேன்...!!!
உன் அருகிலேயே இருந்தேன்
அன்றெல்லாம் சத்தியமாய் தெரியாது
இப்படி ஒரு பிரிவு வந்து
என் கண்களில் இருந்து உன்னை
அருத்தெடுக்குமென்று...
உனக்கெப்படித் தெரியும்
உன்னை நான் நினைப்பது?
மழையாய் வந்து
என்னை தொடப் பார்க்கிறாய்...
ஒருவேளை நீயும் அழுகிறாயோ..??
romba azhaga solliruka...
உங்களின் கவிதைகளுக்கு நான் அடிமை... தொடர்ந்து எழுதுங்கள் கவிபாரதி... படிக்கக் காத்திருக்கிறோம்..
ReplyDeletelovvvvvvvvvvvvvvvvvvely akka...........super.
ReplyDeleteAthithya.
Your frnd is really lucky dear.. keep writing.. best of luck..this is really awsome....
ReplyDeleteஉனக்கு பிடித்த எல்லாமே
ReplyDeleteஎன் அருகில் இருந்து கொண்டு
உனது இல்லாமையை அதிகப்படுத்தினால்....
என்ன செய்வேன்..?
nice lines