Oct 28, 2012

களவு

உலகமே உறங்கிடும் போதும்
உறங்காத உணர்வு...

உள்ளத்தை அழகாக்கும் ஒரு உன்னத விழா...

ஞாபக கதிர்களால் தீண்டப் பட்டு
உடைபடும் மனது..

ஆம்

காதல்....

இதயத்தோடு கட்டி விடப் பட்ட
பாட்டுப் பூச்சி...


மரணமும் அஞ்சும் அதீத சக்தி...

பூக்களெல்லாம் எப்போதும் அழகு

காதல் வந்த கண்களுக்கோ
புல்லின் அசைவு கூட பேரழகு....

தினமும் பார்த்த முல்லை பூவோ
இப்போது... மிரட்டும்...

சிரிக்கும்...

எது எதிரே வந்தாலும்
பிடித்த முகமன்றி வேறெதையும் காண முடியாது...

கருவிழியில் கன்னக்குழியில்..
சிக்கி இறக்கும் சாபம்...

விடியல் வருவதே உன்னை காணத்தான்
என்று

விடிய விடிய
கவிதை வார்த்து...
 
ரகசியமாய்  போர்வைக்குள்
சிரிப்பது ஓர் மாயம்..

"ரோஜாக்கள் கொட்டிக்கிடக்கும் சாலையில்
நீ இருந்தால் கூட...

நீயே பேரழகு" என புகழ்வான்...

இந்த பொய் புகழ்ச்சிக்காகவே காத்திருப்பாள்
அவள்...

அவள் புருவம் அழகென்றும்
அவன் மீசை வீரமென்றும்
பேசி சிரித்து போகும் காலம்....

பதினெட்டில் வந்தாலும் சரி
அறுபதில் நிலைத்தாலும் சரி...

அது மர்மமான ஆனந்தமே! 

எத்தனை முறை பார்த்துக் கொண்டாலும்

இன்னும் ஒரு முறை....

என்று

ஏக்கம் பூக்கும் புதிரான நிலை..

ஒருவர் மீது ஒருவர்
சாய்ந்து கொள்ளும் போது
அதற்காகவே தோள்கள் படைக்கப் பட்டது போல்
சில்லரிப்பு...

இவை யாவும்....
காதலின் இயற்க்கை

அது ஒரு வகை களவு தான்

ஆனால்
ஒரு முறை கற்றப் பின்

மறக்க முடியாத களவு...!!!