Jan 8, 2011

மறந்ததோடு விட்டுவிடு..

நினைவுகள் புதைந்த நெஞ்சுக்குள்
ஒரு துகளாய் ஒட்டி இருந்த உன்னை
தட்டி எடுப்பதாய்
ஒரு நாளும் நினைக்கவில்லை..

நீர் நிறைந்த  நிறைகுடமாய்
நீ என் நினைவுக்குள் தளும்பியது ஒரு காலம்...

நீரற்று போன குளமாய்
நான் கிடக்கும் காலம் இது!

மறந்ததாய் எத்தனை முறை சொல்லி கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப் பார்க்கும்
உன் பவுர்ணமி முகம்
என்னை படுத்தும் பாடு எப்படி அறிவாய் நீ?

உன் முகத்தை விட கண்களையே
அதிகம் காட்டினாய்...

ஆயிரம் கண்களுக்கிடையிலும்
உன்னிரு கண்கள் என் உயிர் பிடுங்குமே...
அதுவெல்லாம்
இன்று நினைக்கையில் கொடுமையடி!

உன்னை தாங்கி நகர்ந்த பேருந்தின் ஜன்னல் ஓரம்
நிலா போல நீ மட்டும் ஏனடி
என் கண்களை உறுத்தித் தொலைத்தாய்..?

என்னை தியாகம் செய்ததில்
நீ என்ன அடைந்தாயோ

நான் அனைத்தும் தொலைத்தேன்!

நெடுதூரம் என் கை பிடித்து
நடந்து வந்தாய்

ஒரு கொடும் பாதையின் விளிம்பில்
நிர்கதியாய் விட்டுவிட்டு
எங்கேயடி பறந்தாய்...?

உன்னால் நந்தவனமான
என் பாலை வழி பயணம் ஒன்று....
உன்னாலேயே
கரிசல் மேடாய் போன நிலை...

உன்னிடம் எப்படிச்சொல்ல....

கண்களுக்குள் என்னை கடத்தி...
கனவாக களைந்தவளே.....

உன்னை தொலைத்துவிட்டதாய்
சொல்லிச்சொல்லி காட்டுவது போல்
கண்களில் தென்பட்டு போவாயெனில்

நீயின்றி வாழ நான் சேர்த்து வைத்த
துணிச்சல் எல்லாம் துண்டுத்துண்டாய் உடைகிறது!!!

என் நினைவுப்பெட்டகம் முழுதும் நீயே இருக்கிறாய்
இருந்தும்...
இல்லாத ஒரு நிலை தந்தாய்...

உன் வாசல் உள்ள திசை பார்த்து
நின்றிருக்கும் என் காதலை
மறந்ததோடு விட்டுவிடு...

நீ என்றாவது வருவாய் என்ற
அடிமனத்தின் ஆசையோடு
வாழ்ந்திறப்பதில் துன்பமில்லை....

நீ இல்லாமல் போனாய் என்ற
உண்மையை தின்று
இப்போதே இறப்பதாய்
எண்ணமில்லை!!!

7 comments:

  1. //நீ இல்லாமல் போனாய் என்ற
    உண்மையை தின்று
    இப்போதே இறப்பதாய்
    எண்ணமில்லை!!!//
    nice

    ReplyDelete
  2. "ண்களுக்குள் என்னை கடத்தி...
    கனவாக களைந்தவளே.....

    உன்னை தொலைத்துவிட்டதாய்
    சொல்லிச்சொல்லி காட்டுவது போல்
    கண்களில் தென்பட்டு போவாயெனில்

    நீயின்றி வாழ நான் சேர்த்து வைத்த
    துணிச்சல் எல்லாம் துண்டுத்துண்டாய் உடைகிறது!!!"


    Superb....

    ReplyDelete
  3. நீ என்றாவது வருவாய் என்ற
    அடிமனத்தின் ஆசையோடு
    வாழ்ந்திறப்பதில் துன்பமில்லை....

    நீ இல்லாமல் போனாய் என்ற
    உண்மையை தின்று
    இப்போதே இறப்பதாய்
    எண்ணமில்லை!!!

    kangalil kaneer konden...

    ReplyDelete
  4. நீர் நிறைந்த நிறைகுடமாய்
    நீ என் நினைவுக்குள் தளும்பியது ஒரு காலம்...

    நீரற்று போன குளமாய்
    நான் கிடக்கும் காலம் இது!!!

    superr

    ReplyDelete
  5. "நீயின்றி வாழ நான் சேர்த்து வைத்த
    துணிச்சல் எல்லாம் துண்டுத்துண்டாய் உடைகிறது!!!
    என் நினைவுப்பெட்டகம் முழுதும் நீயே இருக்கிறாய்
    இருந்தும்...
    இல்லாத ஒரு நிலை தந்தாய்..."

    அருமையான கவி வரிகள்.தங்கள் கவிப் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பிரிவின் வலியால் அழும் மனதிற்கு அழகாய் சமாதானம் சொல்லும் கவி வரிகள், அருமை.

    ReplyDelete