Sep 26, 2012

பிழை இல்லா ஒரு கவிதை...

ஆயிரமாயிரம் வார்த்தைகள்

ஏறிட துடித்ததை
சொல்லாமல் சொன்னது
அழகான வெள்ளைத் தாள்...

மீண்டும் அருகில் எடுத்து நான் கொஞ்ச 
ஏங்கி இருந்ததை அழுத்தமாய் சொன்னது
எழுதுகோள் ...

தூசு படிந்த எனது சிந்தனை
தூரமாய் போன கற்பனை...

ஒன்று திரட்டி அமர்கிறேன்...

காகிதத்தின் மடியில்
என்னைத்  தொலைத்து 
இன்னுமொரு கவிதை தேட..

நீண்ட நாள் கழித்து
வகுக்கும்  கவிதையல்லவா

கை கொண்டு தாங்காமல்
தன் மடி கொண்டு தாங்குவதாய் 
புன்சிரித்தது
வெள்ளைத் தாள்....

அணு அணுவாய்
புதைந்திருந்த மௌனமெல்லாம்

மறுபடியும் கவிதையாய்
வரவே
வரம் வேண்டி காத்திருக்கிறேன்...

பிழை இல்லா
சில வரிகள்
எழுதுவதில் உள்ள சுகம்

காற்றின் சிறகடிப்பில் கரைவதிலும் இல்லை...
கார்கால மழையடிப்பில் நனைவதிலும் இல்லை....

மெல்ல கண்களை மூடி
உலகின் கதவடைத்து
ஒருநிலையாய் யோசிக்கிறேன்..

வார்த்தையில் வஞ்சமில்லா....
ஒரு கவிதை...
 
வானம் பூமி பூக்கள் தேன் நான் நீ காற்று ஆகாயம் மழை
மௌனம் மரணம் காதல் கனவு நிலா நட்சத்திரம் நித்திரை
அன்பு வெளிச்சம் இருள் விண்வெளி வெறும்தரை...

இரண்டே வரிகளானாலும்
இந்த சொற்கள் இல்லா புது கவிதை

வேண்டும்....

மீண்டும்...
மீண்டும்.....

1 comment:

  1. Thirumba ezutha aarambichuta. very good . Neraya ezuthu. All the best. We r with u..........

    ReplyDelete