Sep 25, 2014

காதலே.. உயிர் தேடலே..

"அப் தும் ஹி ஹோ.." என்றேன்...
மௌனத்தை பரிசாக்கினாய்...

இதோ.. உனக்கு புரிகிற மொழியில் என் காதல் வரிகள்....

உனக்காக வாழ்ந்திடும் வரம் ஒன்று போதும்
அதற்காகத்தானே ஏங்குகிறேன்..

உன் விரல் பிடித்திடும் சுகம் ஒன்று போதும்
அதற்காகத்தானே ஏங்குகிறேன்..

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

மழை பொழுதில் வரும்
தனிமைகளில்
உன் அணைப்புக்குள் தொலைந்திட ஏங்குகிறேன்...

உன் அணைப்புக்குள் தொலைந்திடும்
அந்நொடியில்
என் இறப்பையும் நேசிக்க கற்றுக் கொள்வேன்...

ஆருயிரே உன்னை யாசிக்கிறேன்
என் காதலை புரியாதா ??

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

உன் கையை நான்
பிடித்திருக்க..
எப்போதுமே நினைத்திருந்தேன்

உன் பார்வைகள் காட்டிய காதலை கேட்டு
நீ சென்ற பாதையை தினம் தினம் பார்த்து...

ஆருயிரே உன்னை யாசிக்கிறேன்
என் காதலை புரியாதா ??

காதலே
உயிர் தேடலே
என் உயிருக்குள்
உனை பதுக்கினேன்...

காதலே
உயிர் தேடலே
நீ சிரித்ததில்
நான் சிதறினேன்...

காதல் துரோகியே..

தேவதைகள் வெறுக்கப் படுவதில்லை 
நெஞ்சறுத்து நேச துரோகம் செய்த போதும்.....

நீ தேவதைகளில் ஒருத்தியோ... 
நினைவு கிண்ணத்தில் நிறைந்து 
என் மூச்சு காற்றை விழுங்கி 

ஒன்றுமறியா குழந்தை போல 
ஓரப்  பார்வை வீசுகிறாய்...

கனாக்களில் காதல் சொல்வாய் 
எங்கே..
என் கண்களில் உற்று நோக்கி 
சொல்... என்னை  பிடித்ததாய்... 

நெற்றியும் இன்றயும் பாரமாக்கிய
என் பாசத்திற்குரிய காதல் துரோகியே..

காதல் இருந்தால்..

தேநீர் கொப்பைகுள்ளே 
விழுந்த சர்க்கரை துகள்கள் போல் 
நாம் சேர்ந்தே கரைந்திடலாம் 

கம்பளி வியர்வைக்குள் 
காதல் நித்திரையாய் 
நாம் கலந்தே உறங்கிடலாம் 

ஆக்ஸிஜன் அற்று விட்ட 
ஒரு அண்டத்தில் 
இருப்பது போல் உணர்கிறேன்... 

என் பேரழகே நீ வந்தால் 
உன்னை என் சுவாசப் பை முழுக்க 
நிரப்பிக் கொள்வேன்... 

நீ அழகில்லை என்பேன் 
கோவத்தில் உன் முகம் சிவக்க 
நீ என்னை முரைத்திடும் போது 

என் காதல் கற்கண்டே என்று 
கூவி அழைப்பேன்...  

திமிரின் பின்பமாய் 
என்னை திணரடித்தாய்

நான் வெறுக்க முடியாத பவுர்ணமியாய் 
என் வானுடைத்தாய்..

நீ நூலகமாவதானால் சொல் 
உன்னில் இருக்கும் 
உயிர் மெய் ஆயுதம் அனைத்தையும் 
படித்து இறப்பேன்... 

என் நேற்றைய நாட்கள் 
வீணாய் போக 
காத்திருப்புகளை தண்டனைகளாய் வழங்கினாய் 

 உனக்கு பிடித்த பூக்கள் எல்லாம் 
என் வீட்டை அலங்கரித்தப் பின்னும் 
என் வீடு அழகாகவில்லை... 

என் கவிதையே .. 

நிலவரும்பாய் சிரித்து 
நெய் அமுதாய் பேசி 
நாளும் என் விரல் கோர்த்து நீ வராது.. 

எந்த பூவும் 
உண்மையில் பூக்க போவதில்லை 
இந்த உலகில்...


Sep 11, 2014

வண்ணம் இல்லா வானவில்

தேடினேன் இதயத்தில் உன்னால் தாக்கம்
நீ சென்ற சாலையில் பூக்களின் வாசம்

வண்ணம் ஏதுமில்லா ஒரு
வானவில் பார்கிறேன்..
எண்ணம் யாவிலும் நீயே..  நீயே..
காரணம் கேட்கிறேன்...

கனவுகளை சேகரித்து
கதை கதையாய்
பேசிடவா..

கண்களுக்குள் சோகமுண்டு
கவிதையென
எழுதிடவா...

நூறாயிரம் பாஷைகள் உண்டு

நீ அறிந்த மொழியென்ன
அதில் சொல்லவா..

என் மனம் சொல்லவா..

மேல்வானம் கருத்திட
பொழிந்திடும் மழை போல
என் மீது சட்டென்று பொழிவாயா...

தீ சுடுமென்று தெரியும்

தெரிந்தாலும் தொடச்சொல்லும்

மனம் கொண்டேன் நான்..

நீ பிழை சொல்லி
பிரிந்திட நினைத்தாய்

பிறகென்ன செய்வேன்..

சுவாசத்திலே காதல் உண்டு
சாவென்பது இல்லை என்று  
சொல்வாயே அன்பே

 இன்று என் சுவாசம் தீர
அழைத்தேனே உன்னை

அருகில் வர என்ன தடை கண்டாயோ....

நெருப்புக்கும் கிணற்றுக்கும்
இடைப்பட்ட ஒரு இடத்தில்
எனை நிறுத்த ஏன் சதி செய்தாய்...

கண் கொண்ட பின்னும்
தடுமாறி நிற்கும் விதி செய்தாய்...