எதிரில் இல்லை என்ற போதும்
என் உலகம்
இரவு பகல் காண்பது
உன் விழிகளில் அல்லவா..
நான்கு வருடங்கள் நான் கண்ட கனவு..
நாளொன்றில் கரைந்து போக..
என்னை பார்த்தபடியே...
பயணித்தாய் உன் தந்தையோடு...
அன்று இழுத்துச் செல்லப்பட்டது
நீ மட்டும் அல்ல...
நீ உன் உள்ளங்கையில் கசக்கி வைத்திருந்த என் மனதும் தான்!
நீ சிரிப்பாய்...
அன்று களைந்த உன் கூந்தலோடு
காற்று உரையாடும்...
அதை ரசிக்கப் பார்த்து
என் இதயம் அதில் சிக்கிக் கொண்டதுண்டு!
என் வாழ்வில் நீயொரு தூரிகையானாய்...
உன்னை கையில் எடுத்து
நல்லோவியம் ஒன்று
வரைய நினைத்த போது
கொண்டு வந்த வண்ணமெல்லாம்
சிதறியது போல்
அழகுதொலைத்தது என் வாழ்க்கை காகிதம்!
என்னை பார்த்தபோது
உன் மனம்
நெருடவில்லையா உன் தாய் தந்தை முகம்??
அழுத்தி அழித்தும்
அழியாத ஓர் அணுவாய்..
என்னுள் புகுந்த உன்னை
எட்டி நின்றேனும் பார்த்துவிடுகிறேன் ஒருமுறை...
மீதமிருக்கும் என் வாழ்நாளினை
அது தாங்கிப் பிடிக்கும்!!!
good one...
ReplyDeletefantastic!
ReplyDelete