என்ன எழுத நினைத்தாலும்
என் சிந்தனையில் வந்து குதிக்கிறாய்..
என்னை மட்டுமே எழுதென்று
இம்சிக்கிறாய்.....
தூரத்தில் நிற்கிற
நட்சத்திரத்தின் மீது
குழந்தை கொள்கிற ஆசை போல்...
கள்ளமில்லா காதல் கொண்டேன் உன் மீது....
உன்னை நீங்கிய என் கவிதைகளை
தாள்கள் சகித்துக்கொள்வதில்லை!
கண்களை இறுக்கமாய் மூடித் திறந்தேன்....
உன்னை அசை போட்டுக்கொண்டே
என் பேனா நகரத் தொடங்கியது....
இரவின் மடியோடு
தேங்கி இருக்கும் நிலா போல்
என் மனதை காவு வாங்கின
உன் கருவிழிகள்..
சுவாசத்துடன் சேர்த்து
என்னையும் உள்வாங்கும் உன்
மூக்கு...
அதை யோசித்த போதே
உன் சுவாசம் என்னை தீண்டியது...
உனது நுரைஈரளோடு
சிக்குவதற்க்குள் தப்பித்துக் கொண்டேன்...
எனக்காகவே விரித்து வைத்த
ரோஜா தோட்டம் போல்
இதழ்கள்..
வானம் வெட்டிப் போட்ட
நகத் துண்டுகளாய்..
கன்னம்...
என் பாலை நெடுவழியில்
பால் சிதறியது போல்
கழுத்து...
போதும் போ என்று
வெட்கம் கொண்டாய்..
உன் வெட்கத்தில் துளிர்த்ததடி
இன்னுமொரு கவிதை...
நீ வரமா சாபமா....
கவிதை எனக்கு வரம்...
அப்படியென்றால்...
நீ என் கவிதைக்கு வரம்....!
yaarandha varamaai vandha kavidhai???
ReplyDelete