Feb 28, 2011

கரிசல்பட்டியிலிருந்து அவள் காதலன்..

அழகா தான் இருந்த...
என் அகிலமே நீ தான்னு நெனச்சேன்..

ஒரு வார்த்த பேச
ஓராயிரம் தடவ சிரிச்ச....
உன் மடியில ஒரு பூவா
நான் சரிஞ்சி விழுந்தேன்..


கண் சிமிட்டி சிமிட்டி
நீ பாத்த...
அப்போ எல்லாம் என் மனசில
காதலத் தான் கண்ணே நீ சேர்த்த....

கவிதை ஒன்னு வேணுமுன்னு
நீ கேட்ட..  கேட்டதுமே கையோட எழுதி கொடுத்தேன்...

இந்த பூமியோட
நான் வாழும் ஒவ்வொரு பொழுதும்
உன்னை தான் நெனச்சிருந்தேன்..

உன் மேல
காத்து கூட வேகமா அடிச்சா...
சுவாசிக்க மாட்டேனு
தவமிருந்தேன்....

ராத்திரி நீ கனவுல வர
பகலெல்லாம் காத்து கிடந்தேன்..

மழை வந்தா நீ கரைஞ்சு தான்
போய்டுவயோனு
நான் நனைஞ்சு குடை பிடிச்சேன்...  

சுந்தரி உன் கொலுசு மணி
எந்த முத்தால செஞ்சதுவோ....

முத்து ஒன்னு உதிர்ந்தாக் கூட
என் கருவிழிய கோத்து தாரேன்னு...

கொஞ்ச நெஞ்சமில்ல
கொஞ்சிக் கொஞ்சி
காதலிச்சேன்...

என் மனச திருடி
மாயமா போன உன்ன
இந்த ஊருக்குள்ள காணலையே...

என் நெல்லமுதே 
உன்னை விட்டு அழுது தேயற
மனசு
மழலையாட்டம்
கலங்குதடி...

என்னை நீயும் நெனச்சுப் பாரு
நெனவிருந்தா

கண்ணா மூடி நல்லா கேளு
நாலு திசை சாட்சியா

நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்
உன் கழுத்தோட முடி போட...

எந்த தடை வந்தாலும்
வந்து சேரு
நாம சுத்தித் திரிஞ்ச
கரிசல்பட்டிக்கு...

நாத்து நட போன போது
வெயில் கூட சுடல
உன்னை ஓரக்கண்ணால பாத்துகிட்டே
வேல செஞ்சேன்...
அந்த உச்சி வெயில் கூட
நதி போல தோணிச்சு...


நீ வர பாதைய பாத்து
காத்து கிடக்கேன்
நீ வராம போன....

அந்த இடத்துலேயே
இறந்து கிடப்பேன்

புல்லு கூட முளைக்காது
உன் கூட வழாம
நான் செத்துப் போனா.....







6 comments:

  1. இந்த கரிசல்பட்டி காதலனுக்கு என் சலாம்....!!!

    ReplyDelete
  2. அருமையா இருக்கு சகோ :)
    உங்கள் கவிதைக்கு ஒரு பதில் கவிதை படிச்சது எழுதனும்னு தோனுச்சி

    //ரசிச்சி ரசிச்சி காதலித்த காலமெல்லாம்
    கனவாக போவதோ என் மாமா
    உசுரோடு உசுராக பழகியதெல்லாம்
    உன்னருகில்இருக்கத்தானே ???

    மனசெல்லாம் உன் நினைவுதான்
    எனை வந்து வாட்டுது மாமா
    உன்னை வந்து சேரத்தான்
    காலமெல்லாம் துடிக்குது ராசா
    உன் மடியில் அன்றி இந்த சிறிக்கி மவ
    உசுரு போகாது ...........//

    ReplyDelete
  3. Nalla kavidhai.... ithu madhriyaana kavidhaigalum ezhuthunga kavibharathi.... :)

    ReplyDelete
  4. சுந்தரி உன் கொலுசு மணி
    எந்த முத்தால செஞ்சதுவோ....


    முத்து ஒன்னு உதிர்ந்தாக் கூட
    என் கருவிழிய கோத்து தாரேன்னு....


    wow....nalla varigal!

    ReplyDelete
  5. Karisalpatiyilirunthu alla...... Un manathil irunthu vantha kaadhal varigal kavibharathi.. arumayaana matrum nerthiyaana varigal.. :)....

    ReplyDelete