Apr 6, 2011

என் இதயத் துடிப்பை இம்சையாக்கி..

என் இதயத் துடிப்பையும்
இம்சையாக்கியவள் நீ மட்டும் தான்..

உன்னுடன் நெருங்கி நிற்கும் போது
படபடத்துப் போகும் என் இதயத்தின்
சப்தம்...

இம்சையானது..
என்ன காரணம்...

தூக்கம் நழுவிப் போகிற போது....
என்னறையில் காத்தாடி கூட
உன் முகத்தை காட்டும்

என்னை சுற்றி எல்லாமே
உறக்கத்தில் கிடக்க..

என் தொண்டைக்குள் ஊர்ந்து போகிறாய்
என்ன காரணம்...

நிலா சோறு சாப்பிடும் போதும்
என் தட்டில் விழுந்து நிறைந்தாயடி

அம்மாவின் அருகில்
நான் இருக்கும் போது....

காதலை நினைவூட்டி  
களவு செய்கிறாய்
என்ன காரணம்....

அன்று அதிசயமாய்
மழை பெய்து

என் செடிகளை ஈரம் செய்த போது...

அதிலிருந்த பூவெல்லாம்
உன் மருதாணி சிவப்பாய்
மாறிப் போனது என்ன காரணம்...

யாரவது இருக்கும் தருணம்..
முத்தம் கேட்டு அடம் பிடிப்பாய்....

நான் கொடுக்கவும் முடியாமல்
மறுக்கவும் முடியாமல்....

தவித்த நேரம்...
என் உமிழ்நீர் கூட
விஷமானது என்ன காரணம்....

உன் அருகில் கிடந்த போதெல்லாம்
என் கடிகாரம் சுயமிழந்து போகாதா என

யோசித்து பார்த்து
கிளம்பும் போது...

கை பிடித்து இழுப்பாய்..

என் அத்தனை செல்லும்
உன் பிடிப்புக்குள் சிக்கியது...

என்ன காரணம்....

ஒற்றை குடையாய் இருந்த என் மீது
மழை துளியாய் வந்திறங்கினாய்

நீ காய்ந்த பின்னும்....
உன்னில் நனைய ஆசை கொள்கிறேன்..

என்ன காரணம்...

மனதுக்குள் ஒலிக்கும் மாய இசையே
உன்னை உருவாக்கி 
மெருகூட்டி 

என் மனசெவிக்குள் ஊற்றியது யாரோ..... 

போதுமென்று  விலகினாலும்

என் ரத்தத்தோடு
உடலெங்கும் ஓடித் திரிகிறாய்.....

என் இதயத் துடிப்பை..

இம்சையாக்கி....!!!




3 comments:

  1. Woooowwww... superb!

    ReplyDelete
  2. //நீ காய்ந்த பின்னும்....
    உன்னில் நனைய ஆசை கொள்கிறேன்..
    என்ன காரணம்//

    அருமையான கவி வரிகள் தோழி

    காதல் இசை மீட்டி
    எனை மறக்க செய்து
    கம்பி அருந்த வீணையாய்
    உன் ஸ்வரம் காலம் தோறும் நான் இசைக்க
    இசை ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் உன் விரல்களுக்காய் காத்து கிடக்க
    துடிக்கிறேன் அன்பே........
    காற்றை வந்தென் சுவாசம் கொள்

    ReplyDelete
  3. உன் அருகில் கிடந்த போதெல்லாம்
    என் கடிகாரம் சுயமிழந்து போகாதா என
    யோசித்து பார்த்து
    கிளம்பும் போது...
    கை பிடித்து இழுப்பாய்..
    என் அத்தனை செல்லும்
    உன் பிடிப்புக்குள் சிக்கியது...

    nice lines ma..........

    ReplyDelete