நட்பினும் பெரிது காதலா
இல்லை
காதலை காட்டிலும் பெரிது நட்பா
இளமை தரும்
கவிதைகள் தரும்
கலர் கலராய் கனவுகள் தரும்
காதல்....
தோற்ப்பின் தோள்கள் தரும்
அன்பை அளவின்றி தரும்
உலகை சுற்ற பலம் தரும்
நட்பு
யாருக்கும் பயப்படாது காதல்...
யாரானாலும் அணைத்து ஆட்பரிக்கும் நட்பு...
உடல் போயினும் உயிர் நீங்கினும்
அகலாது காதல்
கண்கள் கொள்ளாது கண்ணீர் வரின்
துடைக்காது போகாது நட்பு....
வாழ்க்கை பசிக்கு
காதல் உணவானால் .....
நட்பு நீராகும்....
காதல் கடலானால்
நட்பு கரையாகும்....
காதல் வானமானால்
நட்பு கூரையாகும்....
இதில்
எதை வேண்டுமென்பது
எதை வேண்டாம் என்பது?????
காதலோடு நட்பும்
நட்போடு காதலும்
இணைந்தே உலக பந்தை
சுழற்றுமானால்....
காதலில் மூழ்கி
நட்பில் எழுவதை விட
வேறென்ன வழி???
Nice ma
ReplyDelete